இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத் தலைவன் என்றும் இலக்கிய ஆதாரங்களோடு நிறுவுகிறார். ஐந்து கட்டுரைகள் அழகு செய்கின்றன.
இந்திர விழா என்பது பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் எடுக்கப்பட்டது. இது பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இடம் பெற்றுள்ளன. மழை வளம் பெருகவும், மன்னனின் ஆட்சி சிறக்கவும் விழா எடுப்பதை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போது கோவை பேரூரில் நடைபெறும் இந்திர விழா எனும் நாற்று நடவுத் திருவிழாவையும் விளக்குகிறது. கொங்கு நாட்டில் 10 நாட்கள் நடக்கும் விழாவை புகைப்படங்களுடன் விளக்குகிறது. தேவேந்திர குல வேளாளர்களின் வேளாண்மை சார்ந்த சமூக விழாவாகவும் அமைகிறது என்று ஆய்வுத் தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. பழங்கால இந்திர விழா பற்றி அறிய உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்