காமராஜர் வாழ்க்கை வரலாற்றை எளிய நடையில் கூறும் நுால். முதல் கட்டுரை அவரின் தொடக்க கால வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவும். ஆங்கிலேயர் கொலைக் குற்றம் சுமத்திய செய்தியையும் கோடு காட்டிச்செல்கிறது.
காமராஜர் எதிலும் நேர்மையாக நடந்து கொண்டதையும் குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது. எளிமையின் சிகரமாக இருந்த அவர் வாடகைக்கார் ஓட்டுனருக்குக் கார் வாங்கித் தந்தது, களை பறித்துக் கொண்டிருந்த அன்னைக்கு நேருவை அறிமுகப்படுத்தியது; குஜராத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் தர வந்த போது மறுப்புச்சொன்னது என, பல தகவல்கள் உள்ளன.
தனியாரைக் கல்லுாரி துவங்க அனுமதித்தால் தொழிலாக்கி விடுவர் என்று அன்றே உணர்த்தியது, மார்க்கண்டேயர் நாடகத்தில் சிவபெருமான் வேடத்தில் நடித்த போது நிகழ்ந்த நிகழ்ச்சி போன்றவை எளிமையாக அமைந்துள்ளன.
– ராம.குருநாதன்