இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது.
இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, ஸ்ரீ ஹநுமத் பஞ்ரத்னம், திருப்பல்லாண்டு, திருப்பாவை, வாரணமாயிரம், திவ்ய பிரபந்தத்தில் சில பாசுரங்கள், திருமங்கையாழ்வார் திருமொழி, ராகவாஷ்டகம், ஸ்ரீ நரஸிம்ஹ நகஸ்துதி, ஸ்தோத்ரரத்நம், ஸ்ரீ பகவத்கீதை முதலியன குறிப்பிடத்தக்கவையாகும். வைணவர்கள் இல்லங்களில் இருக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து