கர்நாடக சங்கீத வித்தகர் முத்துஸ்வாமி தீட்சிதர் பாடியுள்ள தலங்களைப் பற்றிய விரிவான யாத்திரை நுால். அவர் பாடியுள்ள 66 தலங்களின் வரலாறு, புராண, இலக்கியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கோவில் அமைப்பு, இறைவன் அருள்பாலிக்கும் விதம், துணை சன்னிதிகள், தீர்த்தகுளம் ஆகியவை பற்றியும் விரிவாக கூறியுள்ளார் தீட்சிதர். அந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
தீட்சிதர் பாடியுள்ள தலங்கள் மற்றும் க்ருதிகளின் பட்டியலைத் தயாரித்து தரிசித்துள்ளார். சில தலங்களின் இருப்பிடத்தை அறிவதில் சிரமம் இருந்த போது, தீட்சிதர் க்ருதியில் அகச்சான்றை ஆதாரமாகக் கொண்டு கண்டுபிடித்துள்ளார்.
திருக்கயிலாயமலை துவங்கி, அருப்புக்கோட்டை வரை தலங்களைப் பற்றி தெளிவுபடுத்தும் ஆசிரியர், இவற்றில் தீட்சிதர் பயணித்த போது சந்தித்தவற்றையும் குறிப்பிட்டுள்ளார். க்ருதிகளுக்கு தொகுப்புரையும் வழங்கியுள்ளார். இறையருள் பெற உதவும் யாத்திரை நுால்.
– முகில்குமரன்