இலங்கையின் வளர்ச்சிக்கு மலையகத்தமிழர்களின் பங்களிப்பு மிகுதி. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும் போராட்டமும் சொல்லிட முடியாது. அவர்களின் வலியை உணர்த்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள நுால்.
மனித உரிமைகள் பறிக்கப்பட்டு மிகவும் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள், மலையகத் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டியதை வரலாற்று கண்ணோட்டத்தோடு எடுத்துக்காட்டுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியின் உழைப்புச்சுரண்டலை இதழ்களில் வெளிப்படுத்திப் புது எழுச்சியை உண்டாக்கிய தஞ்சாவூரைச் சார்ந்த நடேசய்யர் பற்றிய செய்தியும் முக்கியமானது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த விஜய வீர, ஜே.வி.பி., என்ற அமைப்பைத் துவங்கியது, லால்பகதுார் சாஸ்திரி- பண்டார நாயகா ஒப்பந்தம் அமலாக்கப்படுத்துவதில் இருந்த சிக்கல், 1981ல் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபையின் விளைவு போன்ற வரலாற்றுத் தகவல்களை சுருக்கமாக உள்ளடக்கி தந்துள்ள நுால்.
– ராம.குருநாதன்