ஆட்டிசம் என்ற மூளை வளர்ச்சி குறைபாட்டை விரிவாக விளக்கும் நுால். இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச்சு, கேட்டல், சமுதாய தொடர்பு, உறவு பேணல் போன்ற பிரச்னைகள் அதிகம்; அறிவு திறன் இருக்கும். அதை பயன்படுத்தும், வெளிப்படுத்தும் சிக்கல் அதிகம் போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
ஆட்டிசத்தை துல்லியமாக வரையறுக்க முடியாததை போல், சிகிச்சை முறையையும் வரையறுக்க முடியாது. ஒருவருக்கு பயன் அளிக்கும் சிகிச்சை மற்றவர்களுக்கு பயனளிப்பதில்லை. இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டிசம் அறிகுறிகள், பேச்சு திறன் பாதிப்பு, நடத்தை குறைபாடு, பெற்றோருக்கான ஆலோசனை, சிகிச்சை மற்றும் உணவு முறைகள் உள்ளிட்ட 14 தலைப்புகளில் விவரிக்கிறது. ஆட்டிசம் பாதிப்பு தொடர்பான விழிப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்