தமிழகம் முழுதும், 51 காவல் தெய்வங்களையும், அவை காவல் காக்கும் ஊர்களையும் தெரிந்து சொல்லும் நுால். ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கும் வெவ்வேறு வகையான வழிபாட்டு முறைகளும் விரத முறைகளும் உள்ளன. அந்த செய்தியை உணர்த்துவதோடு அந்த முறைகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
காவல் தெய்வங்களுக்குப் பலியிடுதலும், சாமியாட்டமும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. காவல் தெய்வ வரலாற்றுடன் அதி அற்புதக் கதைகள் கூறப்படுவதையும், கண்கட்டு வித்தை புனையப்பட்டுள்ள தன்மையையும், மேனிலைத் தெய்வங்களான சிவன், முருகன், திருமால் தொடர்புகளையும் இணைத்து வழங்கும் கதைகளையும் எழுதியுள்ளார்.
தமிழ் மண் சார்ந்த இறை வழிபாட்டு நம்பிக்கையை எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்