கடல் அலைகள் ஓயாதது போல, கம்பராமாயணத்தில் வாலி வதம் சரியா, தவறா என்ற வாதமும் விவாதமும் ஓயாது தொடர்கிறது. வாலியின் வீரம், ஆற்றல், அன்பு போன்ற பல்வேறு நற்குணங்களை வெளிப்படுத்தும் நுால்.
மறைந்து நின்று வாலியைக் கொன்றது நீதியா... ராமனின் ஆற்றலைவிட, வாலியின் ஆற்றல் குறைந்ததா... வாலியின் வீரத்திற்கு களங்கம் உண்டா போன்ற வினாக்களுக்கு தர்க்க நியாயங்களுடன் விடை சொல்கிறது.
கிட்கிந்தா காண்டம் காட்டும் வாலியின் முழு ஆளுமையும் கம்பன் பாடல்களோடு காட்டிஉள்ளார். வானர வேந்தன் ருட்சரன் பெண்ணாக மாறி, இந்திரனுடன் சேர்ந்து வாலி பிறந்த வரலாறு கம்பன் சொல்லாதது. இதையும் புராணத்திலிருந்து அழகாக எடுத்தாண்டுள்ளார்.
வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல, ராமன் அம்பு வாலியின் மார்பில் நுழைந்த உவமையை நயத்தோடு காட்டியுள்ளார். வாலி வதம் பற்றி விவாதம் செய்யும் இனிய நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்