திருநங்கையாய்ப் பிறந்தவரின் வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டும் நாவல். திருநங்கையர்களின் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது. ஒரு ஆணாலேயோ பெண்ணாலேயோ முழுதாக உணரமுடியாது. திருநங்கையாக இருந்தால் மட்டும்தான் புரியும்.
திருநங்கையின் பெற்றோர், உறவுகள், மொழி, காதல் சடங்குகள் என அனைத்தையும் கொண்டமைந்து உள்ளது. இந்த மானுடச் சமூகம் திருநங்கையரை எவ்வாறு நடத்த வேண்டும் என்று உரத்தக்குரலில் உரைக்கிறது.
ஒரு குழந்தை உடல்ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாக திருநங்கையாக மாறும் போது குடும்பம் மற்றும் சமூகத்திடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் திருநங்கையர் பற்றிய நம் பார்வை எப்படி இருக்கிறது? ஆண், பெண் போலத் திருநங்கையர் மூன்றாம் பாலினம்.
திருநங்கை உருவாவது பழக்க வழக்கத்தாலோ வளர்ப்பாலோ இல்லை. பிறப்பிலேயே நிகழ்கிற பிழை. திருநங்கையரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் நாவல்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்