அன்றைய வேலைகளை ஆசையோடு செய், இளமைப் பருவமும், கனவும், ஆசிரியர்களுக்கு, கல்வி ஏன் அவசியம், நீட் தேர்வு என, 22 தலைப்புகளில் நல்ல பண்புகளையும் சமுதாயக் கடமைகளையும் உணர்த்தி எழுதப்பட்டுள்ள நுால். எதற்கும் தீர்வு தற்கொலை அல்ல, என்ற கருத்தைப் பலப்படுத்தும் வகையில் உள்ளது. எண்ணியது கிடைக்கவில்லை என்றால் அதைவிடச் சிறந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்பதை பதிவு செய்துள்ளார்.
யார் வேண்டுமானாலும் நம்மை விட்டுக் கொடுக்கலாம். நம்மை நாமே விட்டுக் கொடுக்கக்கூடாது. அறிவுசார் மக்கள் நடந்து கொள்ளக்கூடிய வழிமுறைகள், மன நோய்க்கு தீர்வு என இனிப்பு மருந்தாக ஊட்டியுள்ளது. நல்ல எண்ணம், சொல், செயல் ஆகியவற்றோடு விடாமுயற்சியும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை உறுதி செய்யும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்