சித்தர் தேகம் துவங்கி, ஆறுவகைச் சக்கரங்கள் என்பது உட்பட ஒன்பது தலைப்போடு நிறைவடைகிறது. ஞானம் என்பது அறிவால், அறிவை அறியும் பேரறிவு. ஞானம் என்ற சொல் சித்தர் இலக்கிய ஆன்மாவின் இயலைப் பற்றிய ஆழ்ந்த அறிவு என்ற பொருளில் வருகிறது.
பஞ்சாட்சரம் என்னும் நமசிவாய மந்திரம் ஆறு ஆதாரங்களோடு மனித உடலில் எங்கு பொருந்தி உள்ளன. என்பதை விளக்குகிறது. கொங்கணச் சித்தரின் சித்து விளையாட்டுகள் நயம்பட உரைக்கிறது. வரலாற்று நிகழ்வாக விளங்கும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஓரிக்கை எனப்படும் ஓர் இரவு இருக்கை, என்ற நிகழ்ச்சிகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. அஷ்டமா சித்திகளைப்பற்றி விளக்கத்துடன் கூறுகிறது.
மனிதனுக்குப் பிறப்பும் இறப்பும் உண்டு; அதுபோல உலகத்திற்கு தோற்றமும் மறைவும் உண்டு. இந்த தோற்றம் மறைவை வென்றவர் சித்தர்கள். அஷ்டமா சித்திகள் பற்றியும், சித்தி அடையும் வழிகள் பற்றியும் ஆராய்கிறது. சித்தர்களைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு உதவும்.
– புலவர் இரா.நாராயணன்