உடலை இயக்கும் முக்கிய திரவ சக்தியான ரத்தம் பற்றிய விபரத்தை அறிவியல் ரீதியாக கண்டறிந்தது முதல், அது தொடர்பான வளர்ச்சி வரலாற்றை தொகுத்துள்ள அறிவு நுால். தமிழர்கள் அறிய வேண்டிய அறிவியல் பெட்டகமாக மலர்ந்துள்ளது. தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் காயத்ரி சுப்ரமணியன்.
ரத்தம் பற்றிய அறிதல் முதன்முதலில் கி.மு., 400ல் ஏற்பட்டது. அது முதல் தற்போதைய காலக்கட்டம் வரை, அந்த அறிவின் வளர்ச்சி வரலாற்றை மிகத் துல்லிய ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளது. சிறு தலைப்புகளில் உரிய தகவல்கள் முறைப்படி தொகுத்து எழுதப்பட்டுள்ளது. முதலில் இதயம் பற்றி பேசும் கட்டுரை உள்ளது. அடுத்து ரத்த ஓட்டமும் தொடர்ந்து, சிவப்பு, வெள்ளை அணுக்கள் என முறையாக தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடலின் மிக முக்கிய இயக்கு சக்தி பற்றிய அறிவு நுால்.
– அமுதன்