அம்பிகையின் வரலாற்றையும், பெருமைகளையும் முழுமையாகச் சொல்லும் நுால். பகவத் கீதை, மகாபாரதத்தின் நடுவே 700 சுலோகங்களுடன் உள்ளது. அது போல மார்க்கண்டேய புராணத்தின் நடுவே 700 மந்திரங்களுடன் அமைந்துள்ளது.
பூர்வ பாகத்தில் தேவி கவசம், அர்கலா தோத்திரம், மதுகைடப வதம், மகிஷாசுர வதம், துாம்ர லோசன வதம், சண்ட முண்டர்கள் வதம், ரக்த பீஜ வதம், சும்ப, நிசும்ப வதம் ஆகியன உள்ளன. உத்தர பாகத்தில் நவாட்சரி, தேவிசூக்தம், பிரதானிக, வைக்ருதிக, மூர்த்தி ரகசியங்கள் உள்ளன. தேவி புனிதரின் வீடுகளில் லட்சுமி ஆகவும், பாவிகளின் வீடுகளில் மூதேவி ஆகவும், சத்திய சீலரின் வீடுகளில் சிரத்தையாகவும், நல்லோரின் வீடுகளில் தன்னடக்கம் ஆகவும் இருப்பதாக தேவி துதி கூறுகிறது. அம்பிகையின் அருள் தரும் சக்திமிக்க பக்தி நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்