மறைந்த தலைவர் காமராஜரின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மூலம் அவரது பண்பு நலன்களை விளக்கி தொகுக்கப்பட்டுள்ள நுால். வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் 62 சிறிய தலைப்புகளில் உள்ளன.
முதல் பகுதியாக, காமராஜரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, ‘உயர்ந்த உள்ளம், அரசியல் நாகரிகம்’ என்ற தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஒரு சம்பவம்...
ஒரு கூட்டத்தில் காமராஜருக்கு மாலை போட தொண்டர்கள் காத்திருந்தனர். அதை பார்த்த காமராஜர், வரிசையில் நின்ற ஆசிரியரை பெயர் சொல்லி அழைத்து, ‘படிக்காதவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுங்க என்று நியமித்தால், படிக்காதவனுக்கு மாலை போடக் காத்திருக்கீங்களே...’ என்று உணர்த்தியுள்ளார்.
இதுபோல் மிகவும் சுவாரசியம் தரும் நிகழ்வுகளை உள்ளடக்கி, காமராஜரின் நற்பண்புகளை நுட்பமாக வெளிப்படுத்துகிறது. வாசிக்க சுவாரசியம் தரும் நுால்.
– வசந்தன்