அர்த்தமற்ற மனம், பொது அறிவோடு ஒப்பிடல், இலக்கியத்தோடு கூறல், செயற்கை வாழ்வை தவிர், பொன்மொழிகள் என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிங்கப்பூரில் காகங்கள் இல்லை. அயர்லாந்து, ஐஸ்லாந்து, நியூசிலாந்தில் பாம்புகள் இல்லை; அது போல இந்தியாவில் ஈக்கள் இல்லை என்ற நிலை வந்தால், எல்லாரும் சுகமாய் இருப்பர் என்று எழுதுகிறார்.
மெக்சிகோவில் ஊசியுடன் நுால் தரும் மரம் உள்ளது. இதன் பசுமையான தளிர் நடுவில் ஊசி போன்ற முட்களைப் பறித்தால், அதன் அடியில் நீளமான நுால் இழை வர துணிகளை தைக்க அதை பயன்படுத்துவர் என்பது போன்ற பொது அறிவுச் செய்திகள் நுால் முழுதும் உள்ளன. இலக்கியச் செய்திகளையும், நுால் பெயர்களையும் பட்டியலாகத் தந்துள்ளார். படிக்கும் மனதை உயர்த்தும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்