உலகம் முழுதும் எழுந்த சிந்தனை வளத்தை வரலாற்று போக்கில் திரட்டி தரும் நுால். தொடர்கட்டுரையாக, நவசக்தி இதழில் வெளிவந்தவை தொகுத்து புத்தகமாக்கப்பட்டுள்ளது. இன்றைய வரலாறு, புதிய தகவல்களை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. அதை நிரூபிக்கும் துறைகள் எல்லாம் வளர்ச்சியடைந்துள்ளன.
இது போன்ற வளர்ச்சியற்ற காலத்தில், ஆதார நுால்களை படித்து, அவற்றில் இருந்து கருத்துகளை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இன்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல் இந்த கட்டுரைகளில் உள்ள தகவல்களை ஏற்கலாம். உலக அறிவை திரட்டித் தந்துள்ள நுால்.
– பாவெல்