கற்பனை மற்றும் குறுகிய வார்த்தைகளாலும் தன் எழுச்சியாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன. டெரர் வகைக்கு மதிப்பு என்ற நினைப்பால் எழுதப்பட்ட கதைகள் என தெரிகிறது. வரும் 2070ம் ஆண்டில் உலகம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதும் ஒரு அதீதமான கற்பனை. இப்படியெல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயமாக நிறைவேறுமா என்றால் யாருக்கும் தெரியாது. – சீத்தலைச்சாத்தன்