கல்வெட்டு, செப்பேடு, இலக்கியம், கோவில் கலை முதலிய சான்றுகள் வழி அரிதின் முயன்று எழுதப்பட்டுள்ள நுால். பல்லவர்களுக்கு முன் தமிழகத்தின் நிலை, பல்லவர்கள் யார் என்பது பற்றிய விளக்கம், களப்பிரர் குறித்த செய்திகளை விளக்குகிறது. முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்ற முப்பிரிவுகளில் வரலாற்றை விரிவாக ஆராய்ந்துள்ளது.
பிற்காலப் பல்லவர்கள்தாம் வரலாற்றுப் புகழ் பெற்றவர்கள். அவர்களில் சிம்மவிஷ்ணு, மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் பரமேஸ்வரன், இராசசிம்மன் ஆகியோர் சாளுக்கியரோடும், கடம்பர்களோடும் நடத்திய போர்கள், எடுப்பித்த குடைவரைக் கோவில் போன்றவற்றை வரலாற்று மூலங்களோடு எடுத்துரைக்கிறது.
புதிய பல்லவர் என்ற பகுதியில் இரண்டாம் நரசிம்மன், தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் போன்றோரின் வரலாற்றையும் விவரிக்கிறது; பல்லவர் காலத்திய ஆட்சி முறை, கலை இடங்கள், சமய நிலை, இலக்கியம், நுண்கலை போன்றவை விளக்கப்பட்டுள்ளது.
– ராம.குருநாதன்