போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் வரலாற்றுச் செய்திகளை தொகுத்து தரும் நுால். கற்காலம் முதல், இந்தியா சுதந்திரம் பெற்றது வரையிலான கால சம்பவங்களை சுருக்கித் தந்துள்ளது.
இந்த நுால், மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி, பண்டை கால இந்தியாவின் வரலாற்று தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து, இடைக்கால இந்தியா பற்றிய விபரங்கள் உள்ளன. இறுதியாக, நவீன கால இந்தியா பற்றிய விபரங்கள் உள்ளன. இறுதி பகுதியில், இந்தியாவில் செய்தித்தாள்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது.
தகவல்கள் மனதில் பதியும்படி எளிதாக வடிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு உதவும்.
– ராம்