வலிமை கொண்டவன் எல்லா வளத்தையும் பெற்று வாழ்வதும், மெலிந்தவன் வளமில்லாமல் துன்பத்துக்கு உள்ளாவதும் ஒரு காலத்தில் இருந்த நடைமுறை. இந்த நடைமுறையை மாற்றி, மனிதனுக்கு மனிதன் சமம் என்னும் சமத்துவச் சிந்தனையின் செயல்பாடே மனித உரிமைச் சட்டங்கள். இப்போது சட்டத்திற்கு முன் எல்லாரும் சமம் என்னும் நிலைமை உருவாகியுள்ளது. சட்டப்படி மனித வாழ்க்கையை அமைத்துக் கொள்வதை நிலைநாட்டுவதற்காகவே காவல் துறை, நீதிமன்றம் முதலான அமைப்புகள் உருவாகியுள்ளன.
மக்களாட்சி நாடுகளில் நடப்பது சட்டத்தின் ஆட்சியாகும். இதற்கு உட்பட்டு நாட்டு நலன், சமுதாய நலன், தனிமனித நலன்கள் கட்டமைக்கப்படுகின்றன. சமயம், சமயம் தொடர்பான விழாக்கள், ஜாதிப் பிரிவுகள் முதலானவற்றை எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே குடியாட்சியில் செயல்படுத்த முடியும்.
கடவுள் உட்பட அனைத்தும் சட்ட வரையறைக்கு உட்பட்டவை என்பதை எடுத்துக் காட்டுகிறது. அடிப்படை மனித உரிமைகளை, 28 அத்தியாயங்களில் எளிமையாக விளக்கியுள்ளார். குடியாட்சி நாட்டில் மனிதனின் உரிமை எவை, உரிமை மீறல் எவை என்பதை எடுத்துரைக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்