பண்பாட்டு மானிடவியல், சமூக மானிடவியல் என்னும் பிரிவில் சமூக மானிடவியல் என்னும் பிரிவுக்குள் அடங்கும் நுால். அருந்ததியர் என்னும் சாதிப்பிரிவினை உணர்த்தும் பெயர் மிகவும் அண்மைக்காலத்தில் தோன்றியது. விலங்குகளின் தோலைப் பிரித்தெடுத்து அது சார்ந்த தொழில் செய்ததால் செம்மார் என குறிப்பிடுவர். தற்காலத்தில் அருந்ததியர் என்று குறிப்பிடுகின்றனர்.
அதியர் இனத்தின் தொடர்ச்சியாகத் தோன்றிய பெயர்தான் அருந்ததியர் என்று எடுத்துக்காட்டுகிறது. இதற்கு ஆதாரமாக மாதியர் முதலான பெயர்களையும் எடுத்துரைக்கிறார்.
ஒண்டிவீரன் கதைப்பாடலில் அருந்ததியர் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. பெருவாரியான காலாட்படையுடன் சென்று பூலித்தேவனுக்கு ஆதரவாக ஒண்டி வீரன் ஆங்கிலேயரை எதிர்த்துச் சிறப்பாகப் போரிட்டான். அந்தப் போரில் அவனது கால் முடமான காரணத்தால் நொண்டி வீரன் என்று குறிப்பிடுகின்றனர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை தெரிவிக்கிறது.
சேர்வாரன், முத்துவீரன், ராமப்பகடை, சின்னக்குருவன் முதலான அருந்ததியர் குல தெய்வங்களையும், அந்தத் தெய்வ வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. இனவரைவியலை எடுத்துரைக்கும் குறிப்பிடத்தக்க நுால்.
– முகிலை ராசபாண்டியன்