கண்டிப்பு வேண்டாம் எனத் துவங்கி, ஏழு அத்தியாயங்களில் விரித்துச் செல்கிறது நுால். அதில் கவிதை ஒன்று தந்தை குறித்து இடம் பெற்றுள்ளது. அந்தக் கவிதை நுாற்செய்திகளைக் குறிப்பாகச் சொல்லி விடுகிறது.
தாயின் கழுத்தில் தாலி தந்தவன், உலகில் உதித்தபோது உயிரைத் தந்தவன், பேருக்கு முன்னால் போடப் பேரைத் தந்தவன், போகுமிடமெல்லாம் தோளைத் தந்தவன், பொருட்காட்சி மைதானத்தில் பஞ்சு மிட்டாய் வாங்கித் தந்தவன், பட்டுச் சட்டை தந்தவன், பள்ளியில் படிக்க இடம் வாங்கித் தந்தவன்... அவன் பெயர் தந்தை என நீள்கிறது. தந்தையின் பாசத்தை பல்வேறு படிநிலைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது.
மார்பிலும், தோளிலும் துாக்கிச் சுமந்து பாதம் தேய உழைத்து உருவாக்கிய தந்தை எதையும் எதிர்பார்க்கவில்லை. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என முடித்திருக்கும் விதம் சிறப்புக்குரியது.
– ராமலிங்கம்