தென்மதுரையில் முதற்சங்கம், கபாடபுரத்தில் இரண்டாம் சங்கம் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். நாட்டை ஆழி கொண்டதால், கொற்கையை தலைநகராகக் கொண்டு புதிய பகுதியில் குடியேறினர் என்கிறது.
கபாடம் என்றால் கதவு, காவல் என்றும், கபாடபுரம் என்றால் இடைச்சங்கம் இருந்த ஊர் என்றும் தமிழ் அகராதி கூறுகிறது. காவல் நிறைந்த கோட்டை கொத்தளம் நிறைந்த நகரம் கபாடபுரம்.
ஐரோப்பிய சமூகம் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த சமயத்தில் பாண்டியன் கோட்டை கட்டி வாழ்ந்திருக்கிறான் என தமிழர் மேன்மைக்கு சான்று என துவங்கி, விறுவிறுப்பாக ஆய்வுக் கண்ணோட்டத்துடன் காரண காரியத்துடன் எழுதப்பட்டுள்ளது.
கபாடபுரம் முற்காலத்தில் தமிழகத்தின் பகுதியாக இருந்ததென்பதை நிறுவிச் செல்கிறார். கபாடபுரத்து ஆதித்தமிழர்கள் பரதவர் என நிறுவ முயல்கிறது.
– ராமலிங்கம்