திருக்குறள் அதிகாரங்களை அப்படியே எடுத்துக்கொண்டு, அவற்றிற்கு ஏற்ப அதிகாரத்திற்குப் 10 குறட்பாக்கள் வீதம் புதிதாக குறட்பா போல் படைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் படைக்கப்பட்டுள்ளது.
அத்தனையும் அந்தாதியில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரத் தலைப்புகளுக்கு எளிமையான பொருள் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
அரசனைக் குறிப்பிட்டு உணர்த்தும் இடங்களில் முதலமைச்சர் என்று குறிப்பிட்டு ஆட்சி முறையைத் தெளிவுபடுத்தியுள்ளார். வன்கொடுமை செய்வாரை எப்படித் தண்டிக்க வேண்டும் என்றும், கூடா ஒழுக்கம் கேடாய் முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார். பேராசிரியர், முனைவர் முதலான சொல்லாட்சிகளை இந்தக் குரலின் குறளில் பயன்படுத்தியுள்ளார்.
இன்சொல்லே என்றும் இனிது என்றும், பழுதிலா வீடே பயன் என்றும் வாழ்வியல் செய்திகளையும் எளிமையாகத் தெரிவிக்கிறது.
– முகிலை ராசபாண்டியன்