தமிழ் பற்றாளர்களின் தொண்டு, தேச விடுதலை, மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமூக பார்வை, நட்பு, காதல், வாழ்க்கை, பெண்களின் திறன், வரதட்சணை என படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.
துன்பம் துரத்தினாலும், துணிந்து நின்று ஜெயித்திரு என பெண்ணுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. சுதந்திரம் இல்லா வாழ்வு, நிலவில்லா வானம் போன்றது; உயிரில்லா உடம்பு போன்றது என, மக்களின் சுதந்திரம் பேசுகிறது.
‘வாழும் சிலர் கூட்டம் வறுமையில் வாழ; ஆடும் சிலர் கூட்டம் போதையில் மயங்கி; ஓடும் இலக்கூட்டம் தெய்வத்தை விற்று; இத்தனை கூட்டமும் நேர்வழி நின்று நெறியில் வாழ்வது எக்காலமோ’ என்ற வரிகள், செல்வம் வீணாவதை சாடுகிறது.
கைமாறு கருதாது, கணக்கிட்டுப் பாராது, மைமாறி கொடுத்து கலங்குங்காலத்து கரை சேர்க்கும் தெப்பமென உதவும் உள்ளம் கொண்டவனே உத்தம நண்பன்’ என நட்பை விவரிக்கிறது. கவிதை, கதை எழுதி முயற்சிப்போர் வாசிக்கலாம்.
– டி.எஸ்.ராயன்