ரஷ்யாவில் சோவியத் அரசு அமைந்து போது, சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றிய அலெக்சாண்டிரா கொலோண்டையின் புரட்சிகர வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நுால்.
உலகின் மிகப் பெரிய ஒன்றியமாக்கப்பட்ட அரசில் முதன் முதலில் அமைச்சராக பொறுப்பேற்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டங்கள் பற்றி சித்தரிக்கிறது. இந்த வாழ்க்கை வரலாற்றுடன் அந்த காலத்தில் ரஷ்யாவில் நிலவிய அரசியல் நிலவரத்தையும் குறிப்பிட்டு சொல்கிறது.
சோவியத் யூனியன் அரசில் அமைச்சராக அவர் சந்தித்த சவால்கள், அவற்றை நிறைவேற்றிய துணிச்சல் பற்றி எல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் உயர்வுக்கு நம்பிக்கையூட்டும் நுால்.
– ராம்