மணமக்கள் பொருத்தப்பாடு பார்ப்பது பழக்கமாக ஆகிவிட்ட நிலையில் திருமணப் பொருத்தத்தின் கூறுகளான ராசி கட்டத்தின் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் போன்றவற்றை விவரிக்கும் நுால்.
தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், நாடிப்பொருத்தம் உள்ளிட்ட பதினோரு வகைப் பொருத்தங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டு அவற்றால் ஏற்படும் பலன்களும் பாதகங்களும் தரப்பட்டுள்ளன.
ஆண் – பெண் நல்லுறவில் புரிதல் மேலோங்கிய பேதமற்ற சமச்சீர் நிலையை நோக்கிப் பயணிக்கும் இன்றைய நாகரிகச் சூழலில், சாதி மதப் பொருத்தம், கோத்ர பொருத்தம், ஊர்ப்பொருத்தம், அறிவுப்பொருத்தம், அழகுப்பொருத்தம், வசதிப்பொருத்தம் போன்றவற்றை அழுத்தமாக வலியுறுத்துவது கால முரணாகத் தெரிகிறது. ஜோதிடம் கற்றவர்களுக்குப் புரிதல் தரக்கூடிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு