தலைவலி குறித்து எழுதப்பட்டுள்ள நுால். மிக எளிமையான, 19 தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. உடற்கூறுடன் ஆய்ந்து எழுதப்பட்டுள்ள மருத்துவ நுால். உங்களுக்கு தலைவலியா என்ற தலைப்புடன் துவங்கப்பட்டுள்ளது. தலைவலிக்கான காரணங்கள், அதன் வகைகள், வேறுபாடுகள் பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைவலி குறித்து தனியாக விவரித்துள்ளார்.
மூக்கடைப்பால் வரும் தலைவலி, மனச் சிக்கல் காரணமாக வரும் தலைவலி, ரத்தத்தில் சர்க்கரை குறைவு காரணமாக வரும் தலைவலி, மூளை நோய்களும் தலைவலியும் என பல விபரங்களை பகுப்பாய்வுடன் விளக்கியுள்ளார்.
மது அருந்துவதால் ஏற்படும் தலைவலி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவலியை தடுக்க, மருந்தில்லா மருத்துவம் மற்றும் யோகா தியானம் குறித்தும் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. தலைவலியும் உணவும் என்ற அத்தியாயமும் முக்கியமானது. தலைவலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெளிவாக எழுதப்பட்ட நுால்.
– அமுதன்