அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கியவர் ஒரு காவல் கண்காணிப்பாளர் என்னும் போது மிகுந்த கவனம் பெறுகிறது. மொத்தம், 67 தலைப்புகளில் அமைந்திருக்கிறது.
பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் பற்றி எளிமையாகவும், சுவையாகவும் படைக்கப்பட்டுள்ளது. நடைமுறை வாழ்வில் பொதுவெளியில் நடந்துகொள்ள வேண்டியதை உணர்த்தியிருக்கும் முறை அருமை.
சாலை விதிகளை மதிக்காமை, ஆபத்தில் சிக்கி இருப்பவர்களைக் கண்டுகொள்ளாத மனிதநேயமின்மை, வாகனங்களால் நேரும் ஆபத்து, காற்றாடி விடுவதால் ஏற்படும் ஆபத்து, திருடர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள், பொதுமக்களின் அக்கறையில் காவல்துறை வகிக்கும் பல செயற்பாடுகள், காரில் குளிர்சாதனக்கருவியால் ஏற்படும் உயிரிழப்பு முதலானவை தெரிந்துகொள்ள வேண்டியவை. யாவருக்கும் பயன்படத்தக்க நுால்.
– ராம.குருநாதன்