ஆசிய நாடான வியட்னாம் வரலாற்றை, பயணம் மூலம் விவரிக்கும் நுால். இந்த நுாலில் எட்டு அத்தியாயங்கள் உள்ளன. வியட்னாம் எனத் துவங்கி, திருப்பூரில் முடிகிறது. முதல் அத்தியாயத்தில், வியட்னாம் பற்றி தெளிவான பார்வையைத் தருகிறது.
தொடர்ந்து, வியட்னாமில் பயணம் செய்து திரட்டிய தகவல்களை அனுபவத்துடன் படைக்கிறது. அங்குள்ள உணவு, கலாசாரம், கலை என பல்வேறு தகவல்களை மிகவும் நுட்பமாக பதிவு செய்கிறது.
எளிய நடையில் அமைந்துள்ளது. வியட்னாமில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுகிறது. அற்புதமான பயண இலக்கிய நுால்.
– ஒளி