உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா, தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும், அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஜூனியர் வாடாமல்லிகை, எமிலி ஜோலா எழுதிய நானா, ஜேம்ஸ் ஆஸ்டின் எழுதிய ஐந்து சகோதரிகள் ஆகிய நாவல்கள் ஒரே தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன.
எளிய நடையில் நாவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மிகச் சிறப்பான பரிசளிக்கத் தகுந்த படைப்பாக மிளிர்கிறது. எளிமையாக வாசிக்கத்தகுந்த மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால்.
– ராமலிங்கம்