கொங்கு நாட்டின் நிலவியல், வணிகங்கள், ஏற்றுமதி, வாய்மொழி வரலாறுகள், வேனிற்கால விழாக்கள், ஊரக நிர்வாகப் படிநிலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், மரபுக்கதைகள், கதைப்பாடல்கள், புதிர் கதைகள், வட்டாரப் பழமொழிகள், வழக்காறுகள், தெய்வங்கள், கலைகள், பழங்குடிகளின் வாழ் முறைகள் எனப் பலப் பதிவுகளை தந்துள்ள நுால்.
கொங்கு நாட்டினரின் கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள், தேரோட்டங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், திண்ணைக் கதைகள், ஒயில் கும்மிகள், கோலாட்டம், தெருக்கூத்து, பொங்கல், ஆடிப்பெருக்குத் திருவிழா போன்ற நிகழ்வுகளை, 35 தலைப்புகளில் சிறப்புற செய்திகளாக பதிவு செய்துள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்