பெண்டுலத்தை ஊசலாகப் பதிவிட்டு அடையும் பயன்களையும், திறன்களையும் 55 தலைப்புகளில் வகைப்படுத்தும் நூல். சித்தர், காந்த, பெண்டுல மருத்துவங்கள் என்றும், வண்ண ஆற்றலுள்ள கற்கள், பஞ்ச பூதங்கள், மந்திரச் சொல், காந்த மருத்துவம், கிரகங்களின் சக்தி என இயற்கையான முறையில் உடல் தன்மையை நெறிப்படுத்தலாம் என்கிறது.
நோய்வாய்ப்பட்டவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உலகின் மறுகோடியில் இருந்து ஆற்றல் மூலம் குணப்படுத்தும் மருத்துவத்தை, ‘டெலி தெரபி’ என்கிறது இந்த நூல். தொலைவில் உள்ளவரை இருந்த இடத்திலிருந்தே காந்த அலைகள் மூலம் தொடர்பு கொண்டு குணப்படுத்தும் முறை.
வீட்டை வளமாக்க, வாழ்வு சிறக்க, வசிக்கும் வீட்டில் உள்ள திசைகளின் பலன் தரும் இடங்களை அறிந்து பயன்படுத்தும் போது வாழ்வு வளமாகும் என்கிறத. மனையின் சிறப்பு உட்பட செயல்களை ஊசலின் மூலம் தீர்மானிக்கலாம் என்கிறது இந்நூல்.
– முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன்