சிறுவர் – சிறுமியரை மகிழ்ச்சிபடுத்த சீரிய வழியில் நடத்திச் செல்வதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நூல். வன விலங்குகளை மையமாகக் கொண்டு, காட்டின் மகிழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.
ஒற்றுமை, கூடி வாழ்தல், மன வலிமை, உதவி வாழ்தல், நுண்ணறிவுடன் வாழ்தல் போன்ற உயர் பண்புகளும், பெற்றோரை மதியாமை, செய்நன்றி மறத்தல், கற்பழிப்பு, திருடுதல், வீண் பேச்சு போன்ற பண்புகளும் உணர்த்தப்பட்டுள்ளன.
சிறுத்தை வருகிறது, புறாவின் கூடு, நிலாச்சோறு, சிங்கத்தின் மூட்டை, திராட்சை தோட்டம் என 20 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், சிறுவர்களையும், பெரியவர்களையும் பெரிதும் ஈர்க்கும். குழந்தைகளை கற்பனை உலகத்திற்கு கூட்டிச் செல்ல உதவியாக இருக்கும்.
– வி. விஷ்வா