இலக்கியச்சாரல் என்ற இலக்கிய அமைப்பின் 18 வரலாற்றுக் கட்டுரைத் தொகுப்பு நுால். அமைப்பு துவங்கிய நாளிலிருந்து பலதரப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற விழாக்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற நபர்களின் பதிவுகளைத் தாங்கிப் புதினம் போல வடித்துள்ளார் நுாலாசிரியர். இந்த அமைப்பில் ஏறத்தாழ 14 பிரிவுகளில் விழாக்கள் கொண்டாடப்பட்டு உள்ளன.
பிற இலக்கிய அமைப்பினர்களுக்கு எவ்வாறு தங்கள் அமைப்பை வெற்றிகரமாக நடத்துவது என்பது புலப்படும். இலக்கியச்சாரல் அமைப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்ற கட்டுரை, கவிதை, கதை, ஓவியம் போன்றவை முதன்மை இடம் பெற்றுள்ளன. இலக்கியச் சாரல் உருவாக்கிய 12 அம்மன் பாடல் பதிவுகள் உலகம் முழுவதுமான அம்மன் கோவில்களில் ஒலித்து வருவது சால்புடையதாகும். ஓர் இலக்கிய அமைப்பை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பதை சுட்டும் அனுபவப்பூர்வ ஆவணம்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்