இறைவனுக்கு உரிய மூன்று வடிவங்கள் இந்த நுாலில் விளக்கம் பெறுகிறது. மந்திரங்களைச் ஜெபித்து, பிரமன் முதலான தேவர்களை வரவழைத்து வேண்டிய வரங்களைப் பெறலாம். அனைவரும், ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை ஜெபிக்கலாம் என்று விளக்குகிறது.
இயந்திரம் என்றால் இயங்கும் கருவி. அதில் இறைவனின் அட்ஷரங்களையும், பீஜ மந்திரங்களையும் வரைந்து ஜெபித்தால், வேண்டிய வரங்களைப் பெறலாம். மந்திர, யந்திரங்களை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பதை, 51 தலைப்புகளில் சொல்கிறது.
கணபதி மந்திர, யந்திரப் பிரயோகங்கள் மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், பைரவர் முதலிய தெய்வங்களுக்கு உரிய மந்திர இயந்திரப் பிரயோகங்கள் தரப்பட்டுள்ளன. நவக்கிரகங்களுக்கு உரிய ஒன்பது கட்டங்கள் வரைந்து, விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய தியான மந்திரம், மூல மந்திரம், காயத்திரி மந்திரம், 108 நாமாவளிகள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன.
தெய்வீக யந்திரங்களை வரைந்து, அதற்குரிய மந்திரங்களையும், 108 போற்றி வழிபாடுகளையும் நம்பிக்கையோடு தொடர்ந்து செய்து வந்தால், வேண்டிய நன்மைகளைப் பெறலாம் எனக் கூறுகிறது. படித்துப் பயன் பெற வேண்டிய நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்