பூமி உருவாகிய அண்ட வெடிப்புக்கொள்கையில் தொடங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முதன்மை கொடுத்து எழுதப்பட்டுள்ள நுால். பூமியின் முதல் உயிரினம் கடலில்தான் தோன்றியது என்பதையும், ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் என்னும் ராட்சசப் பல்லிகள் இருந்தன என்பதையும் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
இயற்பியல், உயிரியல், வேதியியல், புவியியல், புவியமைப்பியல் முதலான அறிவியல் செய்திகள் பலவற்றையும் படங்களின் துணையுடன் எடுத்துரைத்துள்ளார். புவி ஈர்ப்புக் கொள்கையை நிறுவியவர் நியூட்டன் என்றாலும், இவருக்கு முன்னோடிகளான கோப்பர் நிக்கஸ், கெப்ளர் போன்றோரது ஆய்வுகளையும் நினைவுபடுத்தியுள்ளார். அடிப்படை அறிவியல் செய்திகளை தரும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்