விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத் தலைப்பட வேண்டிய வழிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பரம்பொருளிலிருந்து எப்படி வந்தோமோ, அதே நிலையில் சேர்வதே, வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது, கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது.
வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும், மனிதன் அந்த மனிதத்தை நோக்கிப் பயணிப்பதே, வாழ்வின் தலையாய நோக்கம் என்பது, எடுத்துக்காட்டுகளின் மூலம் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘நாம் இந்த உடல் அல்ல, அதன் பல்வேறு உணர்ச்சிகள் அல்ல, நாம் செயலின் விளைவுகள் அல்ல, செயலின் காரண கர்த்தாவே நாம். ஒரு தச்சன் நாற்காலி ஆக மாட்டான்...
நாம், நமது மனம் அல்ல; ஒரு சாப்ட்வேர் புரோகிராமரை கம்ப்யூட்டர் என்று சொல்ல முடியுமா? அப்படி என்றால் நாம் யார்? அந்த ஆத்மா என்பது தான், சரியான பதிலாக இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. சிந்தனையைத் தட்டி எழுப்பக் கூடியது.
– வி.விஷ்வா