ரோமானிய வீரன் ஜூலியஸ் சீசர் வீரத்தை பேசும் நுால். வரலாற்றைப் புரட்டினால் தான், வருகின்ற தலைமுறைக்கு வீரமும் விவேகமும் சேரும் என்ற உணர்வுடன் எழுதப்பட்டுள்ளது. வரலாற்றில், செனட், கீழ் சபை, மேல் சபை, நீதிமன்றம் போன்ற அமைப்பை, அன்றைய ரோம் நிறுவியது.
பதவிப் பித்தும், லஞ்சமும் அங்கு தான் ஊன்றப்பட்டன. நீதிபதி லஞ்சம் வாங்கினால், மரண தண்டனை என்ற விதியும் இருந்தது. தமிழகத்திலிருந்து மிக மெல்லிய ரோசலின் துணி ரோமுக்கு ஏற்றுமதி ஆனது.
கடல் வணிகத்தில், தமிழர்கள் அன்றே கொடி நாட்டினார்கள் போன்ற செய்திகள் சுவைபட வழங்கப்பட்டுள்ளன. படித்து குறிப்பு எடுக்க வேண்டிய வரலாற்று புத்தகம்.
– சீத்தலைச் சாத்தன்