வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை அமல்படுத்தும் வகையில், கற்பனையில் நிவர்த்திக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. அவை, சமூகத்தின் இன்றைய தேவையை வலியுறுத்தும் வகையில் உள்ளன.
தொகுப்பில் உள்ள முதல் கதை, அர்ச்சகர் பணி என்ற தலைப்பில் அமைந்தது. மிகவும் வித்தியாசமான கருவை அமைத்து எழுதியுள்ளார். வார்த்தைகளில் கடும் கோபம் தெறிக்கிறது. தொடர்ந்து புதிய யேசு, வெள்ளை நிறத்தொரு பூனை, சிதறு தேங்காய் என, கருத்து செறிவுமிக்க கதைகள் அமைந்துள்ளன.
சமூகத்தை பாதிக்கும் செயல்களை, விமர்சனப்பூர்வமாக அணுகி எழுதப்பட்டுள்ளது. மாற்றத்துக்கான முன்னெடுப்புள்ள நுால்.
– ஒளி