துருக்கியின் தொன்மத்தையும், அரசியல் மாற்றங்களையும், ஆற்றல்மிகு ஆட்சியாளராக விளங்கிய ரஜப் தய்யின் எர்டோகன் ஆட்சித் திறனையும் விளக்கும் நுால். மதச்சார்பற்ற தன்மை என்ற பெயரில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு துருக்கியின் பண்பாடும் பாரம்பரியமும் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
உஸ்மானிய ஆட்சியைக் கவிழ்த்து மேற்கத்திய பாணியிலான ஆட்சியைக் கொண்டு வருவோம் என முழங்கிய, முஸ்தபா கமால், இஸ்லாமியருக்கு எதிராக சட்டங்களை இயற்றியதை விரிவாக விளக்குகிறது.
துருக்கியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களையும், ரஜப் தய்யிப் எர்டோகன் பிரதமராக பதவி ஏற்ற வரலாற்றை யும் விவரிக்கிறது. இஸ்லாமிய பண்பாட்டை கைவிடாமலேயே, பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சொந்தக்காலில் நிற்கும் வகையில் நவீன துருக்கியைச் செதுக்கியவர் என குறிப்பிடுகிறது.
– புலவர் சு.மதியழகன்