நிறுவனத்தை, அரசியல் தலைமையை, அரசு நிர்வாகத்தை, தலைமைப் பண்புகளுடன் எப்படி கையாள வேண்டும் என்பதை அறிய உதவும் நுால்.
இருபது தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. சாதனை படைத்த தலைவன் எப்படி இருக்க வேண்டும்; வேற்றுமை பாராமல் செயல்பட, தங்கள் குணநலன்களை எப்படி வைத்திருக்க வேண்டும் என விவரிக்கிறது.
பிறரை மதிக்கும் குணம்; பேசியே தீர்வு காண்பது எப்படி; கொள்கையை தனக்கு ஏற்றார் போல் மாற்றி கொள்வதால் ஏற்படும் பின் விளைவுகள்; பலரது கருத்தை கேட்பதால் கிடைக்கும் நன்மைகள் போன்ற, மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் உள்ளது.
உள்ளம் உறுதியோடு இருந்தால், எதையும் சாதிக்க முடியும்; எதை செய்தாலும், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பது அவசியம் போன்ற குணநலன்களை விவரிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்