வரலாற்றுச் சிறப்புமிக்க தாமிரபரணி நதிக் கரையினில் உள்ள புகழ் வாய்ந்த கோவில்களையும், அது தொடர்பான பல தகவல்களையும் தரும் நுால். அந்நதி தோன்றிய வரலாறு துவங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகள், அகத்தியர் பற்றிய செய்திகள், தொன்மை புராணக் கதைகள், தெய்வங்களின் அற்புத நிகழ்வுகள், திருவிழாக்கள், வழிபட வேண்டிய நாள்கள், ஹிந்து கோவில்கள் மட்டுமின்றி இசுலாமியரின் தர்காக்கள், கிறிஸ்துவ ஆலயங்கள் பற்றிய தகவல்களையும் முழுமையாகத் தந்துள்ளது.
இந்திய விடுதலைக்குத் துணை நின்ற தேசிய உணர்வினர் பற்றிய செய்திகளையும் சேர்த்திருப்பது கூடுதலாக சிறப்பளிக்கிறது. பாளையக்காரர்கள் பற்றிய செய்திகள், ஆதிச்சநல்லுார் நாகரிகம், தெய்வங்களால் நோய் தீர்ந்த வரலாற்றுக் குறிப்புகள் என தாமிரபரணி மக்களின் நாகரிகம், பண்பாடு குறித்த தகவல்களை கள ஆய்வு செய்து ஆவணப்படுத்தியிருப்பது வியக்க வைக்கிறது.
– ராம.குருநாதன்