அகிம்சைக்கு எதிர்மாறான வன்முறையின் தீமைகளை ஆராயும் நுால். வன்முறையற்று வாழ்வதால் ஏற்படும் நன்மைகள், அகிம்சையின் மூலம் ஏற்படும் மாற்றங்கள் குழப்பமில்லாதது; உறுதியான மன வலிமையைத் தரவல்லது. அதன் மூலம் பொருட்செலவுமில்லை; மன அழுத்தமும் ஏற்படுவதில்லை என்பதை விளக்குகிறது.
’எது வன்முறை’ எனத் துவங்கி, ‘தீவிரவாதத்தை திட்டவட்டமாக மறுக்கிறோம்’ என்பது வரை, 10 தலைப்புகளில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. மனித இனம் விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால், மாண்புகளைப் பேணுவதில், அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.
விஞ்ஞானத்தில் வேகமாகச் செல்லும் மனிதன், மனிதர்களின் உயிர், உடைமை, கண்ணியம், நம்பிக்கையைக் காப்பதில் அலட்சியமாக நடந்து கொள்கிறான். கொஞ்சம் விழிகளை அகலத் திறந்து பார்க்க வேண்டும் என, உரக்கச் சொல்லும் நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்