மஹாத்மா காந்தியை அறிமுகம் செய்யும் விதமாக, மிகச் சிறிதும் பெரிதுமாக எழுதப்பட்டுள்ள, 100 கட்டுரைகளின் தொகுப்பு நுால். காந்தியின் வாழ்க்கையை எளிமையாக புரிந்து கொள்ள உதவும்.
‘நாம் ஏன் காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்...’ என்ற தலைப்புடன் துவங்குகிறது. உண்மையின் வழியில், நடந்ததை விளக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது.
அடுத்து, காந்தி எந்த காலகட்டத்தை சேர்ந்தவர் என்பதை அறிமுகம் செய்கிறது. இப்படி சுலபமாக புரியும் வகையில், காந்தியின் அகம் மற்றும் புற வாழ்வை அறிமுகம் செய்கிறது. லட்சியத்தை அடைவதற்கு, அவர் மேற்கொண்ட பயணத்தை காட்டுகிறது.
காந்தி டீ, காபி குடிப்பாரா, அசைவம் சாப்பிடுவாரா போன்ற கேள்விகளை தலைப்பாக்கி, அதற்கான விளக்கத்தை புரியும் வகையில் இந்நுால் தருகிறது. காந்தியின் உயர்ந்த நெறி வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் நுால்.
– ஒளி