ஒரு வார்த்தையைக் கடக்கையில், அதன் உணர்வு, வீரியம், அழகியல் எல்லாம் வாசிப்போரின் மனத்திரையில், ஒரு நாடகம் போல் பதிந்து விரிய வேண்டும் என்பர். எஸ்.எல்.நாணுவோ, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்ததோடு, பல நாடகங்கள், தொடர்களை எழுதியவர். அந்த அனுபவம், கதைகளை கண்முன் காட்சிகளாய் அடுக்குகிறது.
அதேபோல், வீடு, ஆத்மா போன்ற உணர்வுப்பூர்வ கதைகளில், அமானுஷ்ய ஆச்சரியங்களையும், புத்தன் ஒரு கொலை செய்தான் கதையில், ஒரு த்ரில்லர் படத்தின் பதற்றத்தையும் பரிமாறியிருக்கிறார்.
– மேதகன்