ஆலயா, 6/11, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, வ.உ.சி.நகர், பம்மல், சென்னை - 600 014. (பக்கங்கள்-160)
அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை. பார்க்கப்படும் பொருளில் உள்ளது என்பார்கள். விக்கிரமன் அவர்களின் கண்கள் கண்ட வரலாற்று பெருமைமிக்க கோயில்களும், சிற்பங்களும், ஓவியங்களும் இந்த நூல் முழுவதும் எழுத்துக்களாக மின்னுகின்றன.
வாசிக்கும்போது அந்த இடங்களுக்கே சென்று வந்த அனுபவம் நமக்கு ஏற்படுகிறது.தெளிவாகவும் சுவையாகவும் ஒரு விஷயத்தை எழுதும் மரபு மறைந்து வரும் இந்நாளின் இலக்கியப் போக்கில்,இந்நூல் - ஓர் சிறந்த ஆலய, ஆன்மிக கலை யாத்திரைக்கான கையேடு என்பதில் சந்தேகமில்லை.
நமது தொன்மங்களின் வரலாற்றுச் சிறப்பை, அழகியல் நுட்பங்களை நாமறிய வேண்டும் என்னும் உயர்நோக்கில் வடிவமைக்கப்பட்டது இந்த வசீகர நூல்.