நாட்டுப்புறக் கலைகளின் மாற்றங்களை கவனித்து எழுதப்பட்டுள்ள நுால். நாட்டுப்புறக் கலைகள், சடங்கு, வாழ்வியல் நிகழ்வுகளோடு, தொடர்பு பெற்று இருந்தன. கலைஞர்களுக்கும் மக்களுக்கும் உறவு நெருக்கமாக இருந்தது.
நிலவுடைமை சமூகத்தில், படைப்பாளர்களின் அடையாளமாக கைவினைக் கலைகள் இருந்தன. சடங்கு சார்ந்த பொருட்களின் மீதான மக்களின் மதிப்பு உயர்வாகக் கருதப்பட்டது. உலகமயமாக்கல் சூழலில், உடல் உழைப்பால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் யாவும், இன்று இயந்திரங்கள் வாயிலாக செய்யப்படுகின்றன.
உற்பத்தி முறையில் கைவினைக் கலைஞர்கள் மக்களைச் சார்ந்தோ, கிராமத்தைச் சார்ந்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் சாதி சார்பு நிலை மறைந்து, பொது அடையாளமாக உருவாகி வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள், காற்றின் திசை அறிந்து ‘கலம்’ செலுத்தியதும், விண்மீன்களைப் பார்த்து பொழுது அறிந்த நிகழ்வும் சுட்டப்பட்டுள்ளன. கூடை முடைதல், மட்பாண்டம் வனைதல், அரிவாள் வடித்தல் உள்ளிட்டவற்றில், கலை நுணுக்கங்களும், வகைப்பாடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலைகள் உருமாறி, பணத்திற்காக நிகழ்த்தப்படுவதை பதிவு செய்யும் நுால்.
– புலவர் சு.மதியழகன்