ரிஷிகள் கூறிய விதிகளை ஒப்பிட்டு, வீடு, வியாபார நிலையம், கோவில் மற்றும் தொழிற்சாலை வாஸ்துப்படி எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை, பட விளக்கத்துடன் கூறும் நுால். முன்னுரை துவங்கி, 50 கட்டுரைகள் வாஸ்துவைப் பற்றியும், பரிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்கம் தருகிறது. வரைபடங்களும், போட்டோக்களும் கருத்துகளுக்கு விளக்கம் தந்து சிறப்பிக்கிறது.
விஞ்ஞானமும் வாஸ்துவும், பொருட்கள் வைக்க வேண்டிய திசைகள், பொதுவாக தலைவாசல் அமைப்பதற்கான விதிகள், நற்பலன் தரும் தெருக்குத்து, மேற்கூரை, திருக்கோவில்களும் வாஸ்தும், வண்ணத்தால் குணமாகும் வியாதிகள் போன்ற தலைப்புகளில் விரிவாக விளக்கம் தருகிறது.
திசைகளையும், அவற்றுக்குரிய அதிபதிகளையும் குறிப்பிடுகிறது. அதன் பலன்கள், பரிகார முறைகள் குறித்தும் விளக்குகிறது. வணிக நிறுவனங்கள் அமைக்கும் முறை, பணப்பெட்டி வைக்கும் இடம் போன்றவை விரிவான முறையில் விளக்கப்பட்டுள்ளன. ஜோதிடம் தொன்று தொட்டு வரும் கலை. வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ள பெரிதும் உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்