ஆதியும் அந்தமும் இருக்கும் இறைவனை, எல்லைக்குள் அடக்க முடியுமா என்ற கேள்வியின் விளைவாக எழுதப்பட்டுள்ள நாவ், அவருள் இருந்து இயக்கியது இறைவனே என்று இறை நம்பிக்கையை உறுதிபடக் கூறுகிறது.
உலக வாழ்க்கையில் உழன்று உழன்று வாழ்ந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, கற்பனை உலகத்தில் சஞ்சரித்து எழுதுவது தனி இன்பம், அதைவிடப் பெரிய இன்பம், வாசகர்களை அந்த கற்பனை உலகில் சஞ்சரிக்க வைப்பதுதான். இதை, ஆலகாலன் முழுமையாகச் செய்துள்ளது. கற்பனை உலகில் மிதந்து, கற்பனையோடு கூறிய கருத்துக்கள் யாவும் கற்பனையே என்று பதிவு செய்துள்ளது.
பிரமாண்டப் பேரொளிகள் என்று துவங்கி, பிராண நாதன் என்ற தலைப்போடு நாவல் நிறைவெய்துகிறத. பேராசிரியர் பழனியுடன் சந்திப்பு, வில்வபுரம் அலுவலகக் கூட்டம், கோசாலை, அசுரகுரு, கங்காதர ஸ்வாமிகள், காவல் நாகம், ஆலகாலனின் தாக்குதல், ஆலகால நஞ்சை மிஞ்சும் மனிதப் பேராசை, ஆசையே துன்பத்திற்கு காரணம் போன்ற தலைப்புகள், நாவலை விரைவாக நகர்த்திச் செல்கின்றன.
நாவல், கதை எழுதுவோருக்கு வழிகாட்டியாக அமையும் நூல்.
– பேராசிரியர் இரா. நாராயணன்